undefined
புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!
இந்த வலைபதிவில் தமிழ் புதுக்கவிதைகள் , மரபுக்கவிதைகள் , காதல்,தத்துவ,நட்பு கவிதைகள் அடங்கியுள்ளது.
0
comments
Posted in
புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!
0
comments
Posted in
காதல் வெறும் கற்பூரம்
எரிய எரிய மணம்வீசும்
காணாமல் போகும் காற்றோடு
காதல் வெறும் குட்டை
மழை வந்தால் நிறையும்
கோடை வந்தால் மைதானம்
காதல் வெறும் கவிதை
படிக்கப் படிக்க சுகம் கூசும்
கிழித்துப் போட்டால் வார்த்தை
காதல் வெறும் வானம்
அளக்க அளக்க முடியாது
கண்ணை மூடு தெரியாது
காதல் வெறும் நிலவு
பார்க்கப் பார்க்க ஜொலிக்கும்
உள்ளுக்குள்ளே இருட்டிக் கிடக்கும்
காதல் வெறும் மயக்கம்
முழ்க முழ்க இனிக்கும்
முழித்துப் பார்த்தால் புளிக்கும்
காதல் வெறும் காமம்
தொடங்கும் பொது ருசிக்கும்
முடிந்த பின் பசிக்கும்
காதல் வெறும் உணர்வு
வாழ்ந்து பார்த்தால் புரியும்
புரிந்த பின் மனம் தெளியும்
காதல் வெறும் பாட்டு
முதலாம் சுற்றில் களிக்கும்
போகப் போக சலிக்கும்
காதல் வெறும் காதல்
யாருக்கு யார் மேல் வரும்
எப்படியோ முற்று பெறும்
(நன்றி - நாடி நாராயணன்)
0
comments
Posted in
0
comments
Posted in
அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.
0
comments
Posted in
அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியில் இருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கி வைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயில் இருந்து
எச்சிலாக வடிகிறது!
( நன்றி - நாவிஷ் செந்தில்குமார்)