twitter


பிரியமான தோழியே !
நம் பிரிவை எண்ணி
கலக்கமோ !

கலங்காதடி..
பிரிவு எனபது எதற்கு ?

நம் எல்பொதிந்த
மெய்க்கே தவிர..
நம் எண்ணங்களுக்கு இல்லையடி !

பிரிவு
நம்முள் பிரியத்தை
மெருகேற்றிவிடுமடி !

ஆதலின் தோழி !

பிரிவின் மீதே
பிரியம் கொள்ளடி !


காதலிக்கும் தோழிக்கும்

கைபேசியே உனக்கு தெரியுமா வித்தியாசம் ?

தவறிய அழைப்பு தருவது காதலி
தவறாமல் அழைப்பு தருவது தோழி !!!



வானம் தான் தூரம்
என்று நினைத்து இருந்தேன் !!!
ஆனால்...
உன் அன்பு கிடைத்த பின்பு
வானத்தை விட உன் பிரிவு தான்
தூரம் என்று உணர்ந்தேன்...


புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!


காதல் வெறும் கற்பூரம்
எரிய எரிய மணம்வீசும்
காணாமல் போகும் காற்றோடு

காதல் வெறும் குட்டை
மழை வந்தால் நிறையும்
கோடை வந்தால் மைதானம்

காதல் வெறும் கவிதை
படிக்கப் படிக்க சுகம் கூசும்
கிழித்துப் போட்டால் வார்த்தை

காதல் வெறும் வானம்
அளக்க அளக்க முடியாது
கண்ணை மூடு தெரியாது

காதல் வெறும் நிலவு
பார்க்கப் பார்க்க ஜொலிக்கும்
உள்ளுக்குள்ளே இருட்டிக் கிடக்கும்

காதல் வெறும் மயக்கம்
முழ்க முழ்க இனிக்கும்
முழித்துப் பார்த்தால் புளிக்கும்

காதல் வெறும் காமம்
தொடங்கும் பொது ருசிக்கும்
முடிந்த பின் பசிக்கும்

காதல் வெறும் உணர்வு
வாழ்ந்து பார்த்தால் புரியும்
புரிந்த பின் மனம் தெளியும்

காதல் வெறும் பாட்டு
முதலாம் சுற்றில் களிக்கும்
போகப் போக சலிக்கும்

காதல் வெறும் காதல்
யாருக்கு யார் மேல் வரும்
எப்படியோ முற்று பெறும்

(நன்றி - )


குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுவன்!!!



அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.


அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியில் இருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கி வைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயில் இருந்து
எச்சிலாக வடிகிறது!

( நன்றி - நாவிஷ் செந்தில்குமார்)


காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்-
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை அவளின் நினைவுகள்! ! !


சாலையில் உள்ள மரங்களுக்கு
எல்லாம் இலையுதிர்காலம்
நீ வரும்போது...
உன்னை தொடுவதர்காகவே
உதிர்கின்றன...!


பெண்ணே !
நீயும் அழகானவள் தான்
நான் உன்னை தான் நிச்சயமாக காதலித்திருப்பேன்...
நீ உன் தோழியை அறிமுகபடுத்தாமல்
இருந்திருந்தால் !!!


ஏ நிலவே....!!!!!!!

நீ ஆயிரம் முறை
பிறந்து வந்தாலும்
தோற்றுத்தான் போவாய்
எனை தீண்டும் என் அவளின்
பார்வை பிரகாசத்துடன்
ஒப்பிடும் போது.......

ஏ மலரே....!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
விரலின் மென்மைக்கு
ஈடாகுமா உன் மென்மை....

ஏ தென்றலே...!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
மூச்சுக்காற்றின் குளுமைக்கு
ஈடாகுமா உன் குளிர்ச்சி....

ஏ அலைகடலே...!!!!!!

என் அவள் காட்டும் அன்பின்
ஆழத்தின் முன் நீ
மிக சாதாரணம் தான் எனக்கு...


வெட்கம் இல்லாமல்
அவள் பின்னால் அலைகிறேன்..
என்றாவது என்னை வெட்கத்தோடு பார்ப்பாள் என்று..


பெண்களின் காதல் படித்தவனையும் பரதேசி ஆக்கும்.
பெண்களின் பார்வை அறிஞனுக்கும் அல்வா கொடுக்கும் .
பெண்களின் அழகைப் பார்த்து மயங்கினால்
அதில் ஆப்பு இருப்பதை மறந்துவிடுவாய்.
பெண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.
அறிவை நீ நம்பு உன்னை காப்பாற்றும்.
பெண்ணைக் காதலித்து காலத்தை வீணாக்குவதைப்பார்க்கிலும்
தாய்மண்ணைக் காதலித்து சரித்திரம் படைத்திடில் தமிழா...
நாளைய வரலாறு உன்னை வணங்கிடும்
நாளைய சந்ததி உன்னை போற்றிடும்.


நித்தம் ஒரு முத்தம் என
அத்தை மகள் கன்னத்தில்
மொத்தம் நான் சேர்த்து வைத்த
முத்தங்களை ,
வட்டி எட்டு வாங்கிடலாம் என்றிருந்தேன்
வங்கியே கொள்ளை போய்விட்டதம்மா !!


தினப்பத்திரிக்கை எடுக்கவரும்போதெல்லாம்
நீ பார்ப்பது எதுக்கு ஓசியில் பேப்பர்,
என்பதுபோல இருக்கும்,
தினம் தினமுன்னைப்பார்ப்பதுக்காகவே தினப்பத்திரிக்கை எடுக்கிறேன் என்பது உனக்கு தெரியுமா?

சின்னச்சிரிப்பாவது சிரிக்கமாட்டாயா நீ என
எத்தனை முறை ஏங்கினேன் தெரியுமா?
உன்பார்வையின் அர்த்தம் தெரியாமல் எனக்குள் கனன்று போனேன்.
உன் பார்வை என் கண்களில் தெரியும் காதலை அங்கீகரிக்குமா?
கேட்கத்தெரியவில்லை எனக்கு நீ என்னைக்காதலிக்கிறாயா என்று
உன் பதில்களுக்காக என் மொளனத்தை சேமிக்கிறேன்.

ஒருவேளை நீயும் மொளனம் காக்கிறாயோ ?
இருவரும் மொளனமாயிருந்தால் ஏதுவழி? ஒருமுறையாவது கண்களால் சிரித்துவிடு
தைரியம் வந்துவிடும் எனக்கு என் காதலைச்சொல்ல உன்னிடம்...


மறுபடியும் பிறக்க விரும்பவில்லை,

இந்த பிறவியே போதும்

திரும்பவும் பிறக்க ஆசை,

நீ மறுபடியும் பிறப்பாயா?

ஏனெனில் தேவதைகளுக்கெல்லாம் பிறப்பில்லையாமே?


உனது தந்தையின் இறப்பு செய்தி
ஈ-மெயிலில் வருகிறது
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளை தேடி எடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்
உயிரே மீட்க உதவாத உன் டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரித்த சாம்பல் கூட எஞ்சி இருக்காது
அதனாலென்ன நண்பனே ...
இறந்துபோனவர்களுடன் தொடபுகொள்ள
ஒரு வெப்சைட் வராமலா போய்விடும் !


நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்
தோழி...!
(நன்றி-சதீஷ் )


நீ சுகமாய்
உன் திருமண பத்திரிக்கை கொடுத்து போய் விட்டாய்...!
என் ஆத்ம நண்பர்களே...
என்னை பார்க்க இனி நீங்கள் வருவதாய் இருந்தால்.......

அவள் என் கடிதத்தை கிழித்த
அந்த ரயில் பாலத்தின் அருகேயோ..?

தினமும் அவள் வரும் அந்த பேருந்திலோ..?

பூக்கார அக்காவிடம்...
என் துக்கத்தை சொல்லிகொண்டோ..?
தாழிடப்பட்ட என் இருண்ட அறையிலோ..?

முத்தமிட்ட கோவிலின் பின் புறமோ..?

எங்காவது இருப்பேன்..!!!!

இல்லையென்றால் இறந்து போய் இருப்பேன்...
இறந்த சுவடுகூட இல்லாமல்..!


தூக்கம் என் கண்களை தழுவுகிறது , ஆனால்
தூங்கினால் நீ என் கனவில் வருவாயே !
உன்னை கனவில் கூட காணவேண்டாம் என்றுதான் ,
கண்களை மூடாமலே கழிகிறது என் இரவு !
ஆனால் இருளில் கூட என் முன் தோன்றி ,
அழவைக்கிறது உன் கண்களும் அதில் தெரியும் துரோகமும்


இளைஞனே...
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது !
பார்வையிருந்தும்
பாதையை தேடாமல் நீ !
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம் !!


ப்ரியமானவனே,
உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை
பிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று
என் கண்கள் எதோ ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கின்றன
காரணம் கேட்காதே,
எனக்கே தெரியவில்லை ஏன் என்று..
என்னை நினைத்து நானே பயம் கொள்கிறேன்
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன்
வாழ்க்கை என்றால்
இத்தனை விசித்திரமானதும், வேடிக்கையானதும்- என்று
உன்னோடு பழகிய பின்புதான் உணர்கிறேன்,
நண்பனாய் வருகிறாய் நீ,
தோள் சாய வேண்டும் என்கிறேன் நான்
எனை ஏன் இப்படி மாற்றிவிட்டாய்?
நான் செய்த தவறுதான் என்ன?
உன்னை நேசித்தது ஏன் தவறா?
உன்னை நெருங்கி வந்தது என் தவறா?
கள்வனே, உன்னை நான் பிரியவில்லை,
ஆனால் விலகிச்செல்கிறேன்
உன்னை காயபடுத்தவில்லை,
ஆனால் காலங்களை கடக்க வழி தேடுகிறேன்.
கேள்விகள் கேட்காதே. காரணம்,,
இப்போது நானே ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறேன்
கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தால்
தோழனாக வந்து தலை கோதுகிறாய்
மறுபக்கம் ?????? வந்து மார்போடு அணைக்கிறாய்,
தவிக்கிறேன் நான்,
உணர்விற்கும், உறவுக்கும் மத்தியில் நின்று
மறுபடியும் சொல்கிறேன் உன்னை மறக்கவில்லை நான்
உன்னோடு பேசிப்பழகிய நாட்கள் இன்றும்
என்னுள் நீங்கா நினைவுகளாக!
நகர்ந்த்துக்கொண்டுதான் இருக்கின்றன!
இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும்!!!


கணினியின்
கண்டுபிடிப்புக்கு பின்
உலகமே என் விரல் நுனியில் என
மார் தட்டுகிறாயே !
ஒரு நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை என்பதை உணர்வது எப்போது ?


கவலையையும் சோம்பலையும்
கழற்றி எறிந்துவிட்டு
உற்சாகத்தை
உடுத்திக்கொள் !
உன் பலகீனங்களை
உழைப்பெனும்
பலம் கொண்டு
பலகீனப்படுத்து!!
நீயே சரணாகதி என்று
எப்போதும் வெற்றி
உன் காலடியில் தவம் கிடக்கும் !!!


சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

நன்றி - கல்குதிரை


கொஞ்சம் பொறு என
ரோஜாவை எடுத்து நீட்ட ;
உன்னை விட அழகாய்
வெட்கத்தில்
சிவக்க தெரியவில்லை
ரோஜாவிற்கு !!!


அரச மரத்தை சுற்றாமல் …
பத்து மதம் சுமக்காமல் …
பிரசவ வலியை அனுபவிக்காமல் …
பிள்ளை வரம் பெற்றது
குப்பை தொட்டி !


இந்த உலகம் என்னைபோல
உண்மையான காதலர்களை
காணும் வரை
என் கல்லறை என்றும்
ஒரு உலக அதிசயமே !!!


நான் நேசிக்கும்
அவள் முகத்தை
ஓவியமாக தீட்டி வைத்தேன் !
அதில் இருக்கும்
கண்களாவது
என்னை பார்க்கட்டும்
என்று !!!


எதிர் வீடு ஜன்னலை
பார்த்தேன் நிறைய சட்டைகள் ..!
என் சட்டையை பார்த்தேன்
நிறைய ஜன்னல்கள் ..!


நீ பார்க்க வேண்டும் என்பதற்காக தான் …
உயிரை பணயம் வைக்கிறேன் …
நீ வரும் பேருந்தில் படியில்
நின்று பயணம் செய்கிறேன்
இல்லை இல்லை
பயமறியாது ‘ காதல் ’செய்கிறேன்!!!
(நன்றி - ஜார்ஜ் )


நீ சிரித்து விட்டுப்போன பின்பு தான்

எனக்கு நான் யார் என்பதே தெரிகிறது ….

உன்னால் பைத்தியம் ஆனவன் நானா ?

இல்லை உனக்காக பைத்தியம் ஆனவன் நானா ?


எப்படியும்
என் காதல்
உனக்கு புரிய போவதில்லை ….
நானும் உன்னை மறப்பதாக இல்லை …
ஆனாலும் ஏன் என்னை
நீ உறங்க விடுவதில்லை …
பகலில் உன்னை பின் தொடர்வதால …..


உன்னை
படைத்தவனுக்கும்
கூட புரியாது !
உன் பார்வையின் அர்த்தம்
உன் விழியை பார்த்த
எனக்கும் புரியவில்லை!
அனால்
என்னமோ செய்கிறது
என்னை !


என்னவள்

ஒரு - கவிதை எழுதினால்

கிழே கையெழுத்திட்டால்

குழம்பினேன்

எது கவிதை என்று ...!


அவள்
என்னை கடந்து செல்லும்
போதெல்லாம்
என் இதயத்தை கூட
நிறுத்தி வைக்கிறேன்!
அவள் கால் கொலுசின்
ஓசையை ரசிப்பதற்கு !


எப்பொழுதெல்லாம்
உள்ளம் வலிக்குமோ
அப்பொழுதெல்லாம்
உன் தாயிடம் பேசிப்பார்
அவள் அன்பு
உன் மனதை வருடும் !


உன் முகத்தை
பார்க்காமல் செல்கிறேன் !
உன்னை பிடிக்காமல் இல்லை
நீ என்னை பார்க்காமல் செல்வதை
பார்க்க முடியாமல் ...!


பிணம் போகும் பாதையில்
மலர் தூவும் மனிதர்கள்
இரு மனம் போகும்
பாதையில் மலர் தூவ
மறுப்பதேன் !






அன்பே..
உன் காதோர முடியை
என் சுண்டு விரலால் ஒதுக்கிவிட்டு
உன் காதில் என் காதலை
நான் சொல்ல அந்நேரம்....
உன் உதட்டோரம்
நீ தவழவிடும் புன்னகையை ரசிப்பதற்காகவே
ஆயிரம் முறைகூட சொல்லலாமடி
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று !!!!!
(நன்றி - மணிகண்டன் )


எனக்கு வரதட்சணை என்று

எதுவும் வேண்டாம்...!

ஆனால் தயவுசெய்து

நீ உடை மாற்றும்போது மறந்தும் கூட

உன் தோழிகளை பக்கத்தில் வைத்துகொள்ளதே...

பிறகு கண்பட்டு

உன் "அழகு சீர்வரிசைகளில்" ஒன்று குறைந்தாலும்

நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்...!!


நீந்தும் கண்ணே !

நான் உன் காதலன்.

சிவந்த இதழே !

நான் உன் காதலன்.

சிரிக்கும் முத்தே !

நான் உன் காதலன்.

பௌர்ணமி முகமே !

நான் உன் காதலன்.

பாதம் பார்க்கும் நாணமே !

நான் உன் காதலன்.

பொய்க்கும் கோபமே !

நான் உன் காதலன்.

மலரா மொட்டே !

நான் உன் காதலன்.

மென்கொடி இடையே !

நான் உன் காதலன்.

பருவப் பெண்ணே !

நான் உன் காதலன்.

மறவாய் ! நான் உன் காதலன்.

பெண்ணே ! நான் உன் காதலன்.


அணில் கடித்த பழம்...
அது மிக இனிப்பாக இருக்குமாம்..!!
அழகி!
நீ கடித்த பழத்தை
அணிலே...
கெஞ்சி கேட்டு கொண்டு நிற்கும்...!??


"பிரிய சில்மிசக்காரா"
என் கைப்பையில் இருக்கும்
"அழகு' சாதன பொருட்களை பார்த்து..,
நீ சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது
"இத்தனை நாள் இதை போட்டுத்தான்
உன் கொள்ளை அழகுகளை மறைத்து கொண்டு இருந்தாயா..?
ம்ம்ம்...
உன் வாசமிகு வியர்வையை விடவா
இந்த "உடல்வாசனை பூச்சு"
என்னை மயக்கிவிட போகிறது? என்று..!


வானவில்லையும் திரும்பி பார்க்க வைக்கும்
வர்ணகலவையே!
நீ கோபமாய் பார்த்தால்...
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்..
சுந்தரி உனக்கும்..
அதிக வித்தியாசமில்லை !!!
நீ பிரியமாய் கொடுக்க ஆரம்பித்தால்...
கர்ணனுக்கும்!
காதலி உனக்கும்!
அதிக வித்தியாசமில்லை !!!


முகவரி இல்லாத பயணம் ,

நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க ' மாட்டேன் .

வலியே தெரியாத காயம் ,

நான் வலியால் துடித்தாலும் மருந்திட ' மாட்டேன் .

வடிவம் இல்லாத உருவம் ,

நான் மறைந்தாலும் உன்னை மறக்க ' மாட்டேன் .

உறவு தெரியாத உணர்வு

நான் மூச்சு விட்டாலும் உன் சுவாசம் விட ' மாட்டேன் .

நான் தடுமாறினாலும் உன்னை தவறவிட மாட்டேன் .

என் அருமை காதலியே !


அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே ,

இன்று அவள் கைவிட்ட பிறகு - உன் ,

கையை தாங்கி பிடித்தது நானேதான் .

இப்படிக்கு சிகரெட்...




நான் உன்னிடம்
கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர !!!


அவள் என்னை
பிரிந்து விட்டால்
என்பது எனக்கு தெரியும்
பவம் என் இதயத்துக்கு தெரியாது
அது அவளுக்காக இன்னும்
துடித்து கொண்டு இருக்கிறது !!!


என் கல்லறை மேல்
உன் பெயரை எழுதி வை !
நினைபதற்க்கு அல்ல
அங்கும் உன்னை
சுமப்பதற்காக !!!


உன்னை கவிதை என்று
என்றோ வர்ணித்தேன்
அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது ...
உன்னிலும் பொய்கள்


எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்று ...
அல்ல நீ வேறு எவரையும்
நேசிக்க வில்லை
என்றாவது எழுது ...


உலகத்திலேயே சிறிய கவிதை
என்னவென்று கேட்டால்
தாய் என்பேன் .
அதையே
என் தாய் வந்து கேட்டால்
இன்னும் சிறிதாய் சொல்வேன்
நீ என்று ...


ஒரு வண்ணத்துபூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது

ஏன் இந்த பூ மட்டும்

நகர்ந்துகொண்டே இருக்கிறது ? என்று ...


உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?

உன் பேரழகுகளின்மேல் நிற்க முடியாமல்

சறுக்கி விழும் துப்பட்டாவை...

சரி செய்ய உன் கைகள் செல்லும் போது...

அழகுகளை பார்க்க வளையல்களுக்குள்

சண்டை போட்டுக்கொண்டு பெருமூச்சடைந்து சிணுங்குகிறது....

வளையலுக்கே இந்த கதி என்றால்..?

(நன்றி- சதீஷ் குமார் )


மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய் நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்
கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா
நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன்
என் நண்பனே கரைகிறேன்
உன் நினைவிலே உன்னை இழக்கிறேன் என் நண்பனே!!!
(நன்றி - ஜீவிதா )


உறக்கம் பிடிக்கும்..
உள்ளே கனவாக நீ இருந்தால்..!!
உணவு பிடிக்கும்..
நீ உருட்டி ஊட்டி விட்டால்..!!
மயங்குவது பிடிக்கும்..
மயிலிறகாக உன் மடி கிடைத்தால்..!!
வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!
மரணம்கூட பிடிக்கும்..
கடைசி மூச்சு உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!


நீ
என் கனவுகளில்
தொடர்ந்து வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!


நாம் போகும் பாதை
மனல் பாதையாக இருக்க வேண்டும் என்று அசை படலாம்,
ஆனால் ஒரு முல் கூட இருக்க கூடாது
என்று அசை படுவது அசட்டு தனம்.
நல்ல் அனுபவம் கிடைக்கும் போது
பரவசம் படனும்,
மோசமான அனுபவம் கிடைக்கும் போது
பக்குவபடனும்


நீ
எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய இரக்கமில்லாத...கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..?


என் காதலி இறக்கவில்லை
அவள் தந்த காதல் தான்
இறந்து விட்டது !
நானும் ஒரு ஷாஜஹான் தான்
என் இதயமும் ஒரு தாஜ்மஹால் தான் .


நினைக்கும் பொருளில் எல்லாம்

உந்தன் நினைவுகள் தானடி;

உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடி ;

சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடி ;

நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்றாலும்

எனக்குள் ஏனடி இவ்வளவு போராட்டம்;

உன்னை அன்றி

நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாய் கழிகின்றன;

கண்களை மூடினால் கூட

இமைகளுக்கு நடுவில் நிற்கிறாய்;

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!


திடீரென்று விழித்து எழுந்தேன் !

என் வீட்டினுள் திருடன் நுழைந்தான் போல .

அபொழுது தான் நினைத்தேன் .

வீதியில் படுத்திருக்கும்

எனக்கு வீடு ஏதுமில்லை என்று


உடைந்து போன வளையல் ,
தவறி விழுந்த hair clip,
அவள் முகம் துடைத்த kerchif,
அறுந்து விழுந்த பாசிமணி ,
மை தீர்ந்த பேனா - என ,
அத்தனையும் இருக்கிறது
என்னிடம் ...
அவளை தவிர .


உனது புகைப்படம் ,
ஏன் என்னிடம் கிடைத்தது ?
கடவுள் போட்ட திட்டமா ,
என்னை பித்தனாக்க ?


நான் காதலிப்பது
யாருக்கும் தெரிய கூடாது
என்று நினைத்திருந்தேன் ,
கடைசியில்
அது அவளுக்கே
தெரியாமல் போய் விட்டது .


காதலில் விழுந்த காரணத்தால் ,
எத்தனை காயங்கள் ,
எத்தனை இளப்புகள் ,
உனக்காக வாழ்ந்ததில் ,
காணமல் போன என் வாழ்க்கையை ,
தயவு செய்து வந்து
பார்த்து விட்டு போ .


பெண்ணே,
உன் நய வஞ்ச காதல் ,
நசுக்கி போனது என்னை மட்டும் அல்ல :
நாளைய பற்றிய என் நம்பிக்கையும் தான் !
இன்னும் எத்தனை பேரை நாசமாக்க போகிறாய் ,
முடிய போகும் இளமையை வைத்து .


உன் தேர்வு முடியும் வரை

நோ சாட் நோ நெட்

என சட்டம் இயற்றினாய்

உன் முன்னோர்கள்

வெள்ளையர்களுடன் வேலைப்பார்த்தவர்களோ

உன் அடக்குமுறைச் சட்டங்கள்

ரவுலட் சட்டத்தைவிட

மிகக் கொடியவை

***************************************************

யார் யாரிடமோ

நம்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்

நீயும் நானும் பேசிக் கொள்வோமே

இவர்களின் நலன் கருதி..

****************************************************

உன்னை வந்து கேட்க ஆசை

உனக்காக காத்திருக்கும் நேரங்களில்

நீ வர தாமதமாகும் காரணங்களை

நீ தாமதமாக வரும் முன்பே

*****************************************************

படவா.. புரிஞ்சிக்கோடா...

என் தங்கம்..

இந்த வார்த்தைகள் மட்டும்

தமிழில் இல்லையென்றால்

உன்னிடம் என் ஸ்டிரைக்'கை

வாபஸ் வாங்கமாட்டேன்...

*****************************************************


காதலுக்கு தாஜ்மகால் கட்ட முடியாவிட்டாலும்!
கவிதையில் நிரந்திர குடியிருப்பு வாங்கிதருவேன்.
தங்க நகைகள் வாங்க முடியவிட்டாலும்!
மங்காமல் என் கவிதையில் இருப்பாய்.
வைரம் வாங்கி தரமுடியா விட்டாலும்!
ஜொலிப்பாய் கவிதையில்
இறப்பு இல்லாத வாழ்க்கை வாங்கி கொடுப்பேன்!
கவிதை இறக்கும் வரையில்
நீ இருப்பாய் நாயகியாக


எழுத்தில் மட்டும்
செயலில் இல்லை
"வாய்மையே வெல்லும் "

கடவுளை நம்பினோர்
கைவிடபடார்
"சபரிமலையாத்திரை விபத்து "

கீர்த்தியால் பசி தீருமா ?
ராமர் கோவிலால்
ஏழைக்கு விடியுமா ?

(நன்றி -இரா ரவி )


குடல் பசியை போக்கிட
உடல் விலை போகிறது
விபச்சாரம்

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரன் ...

சுவரில் எழுதாதே !

சுவர் முழுவதும்

எழுதிருந்தது ...

அப்பாவும் மகனும்

ஒரே வரிசையில்

வேலைவாய்ப்பு அலுவலகம்

விதவை வானம்

மறுநாளே மறுமணம்

பிறை நிலவு


(நன்றி இரா ரவி )


அவர்கள்
வெளியேறுவதற்காக வந்தவர்கள்
உள்ளே வந்து உங்களை வெளியேற்றியவர்கள்
அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்
அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய்
உங்களை
மொய்க்க வைப்பவர்கள்
அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும் போது தூக்கத்தைத் திருடுபவர்கள் தூங்கும் போது
கனவுகளைக் களவாடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பயண திசைகளைமாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால் ஓடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பசியை உண்பவர்கள்
அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள் விளையாடிவிட்டு
பின் உடைத்துப் போடுபவர்கள்
அவர்கள் உங்கள் ஏமாற்றத்தின் விந்தில் உற்பத்தியாகிறவர்கள்
அவர்கள் உங்களில் இருப்பவர்கள்
ஆனால்
நீங்கள் அவர்களில் இருப்பதில்லை
(நன்றி - ராஜா சந்திரசேகர் )


ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்
ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்
ஆண் தன் தோரணை கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்
ஆண் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்
உன்னுடனான காமம் சலித்துவிட்டது என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது என்றாள் பெண்
மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்
பாழடையத்துவங்கிய
வீட்டின்அலமாரியில் இருக்கின்றன
ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணின் பொம்மையும்
முத்தமிட்டபடி.( இந்த கவிதை இதழ்கள் வலைபக்கதிலிருந்து எடுக்கப்பட்டது )


தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள் க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்து ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.


உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன பூக்கள் …
அது போல தான்…
உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியாய் உயிர் விடுவேன்
நானும் …


நான்
ஆயுள் கைதி
ஆகிறேன் !!!
உன் ஆடைக்குள்
என்னை
சிறை வைப்பாய் என்றால் !!!


வரமாய் நீ
கிடைக்கும் வரை
என் வாலிப தவம்
கலையாது !!!
நதியை நீ
பாயும் வரை
என் இளமை ஆணை
நிறையாது !!!
அமுதமாய் நீ
வழியும் வரை
என் இதய கோப்பை
நிறையாது !!!
வசந்தமாய் நீ
வரும் வரை
என் வழக்கை வாசல்
மூடாது !!!


சொல்லி விட
எண்ணி பல நாள்
அருகில் வருவேன் …
உந்தன் பார்வை பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து விலகி விடுவேன் …
என் மனதில் உள்ளது
தெரிந்தும் விளையாடும் பாவையிய
நீ ஏற்று கொள்வாய்
என்றே தொடர்கிறேன்
உன் நிழலை
தொடர்வேன் என்றும் …


நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும் !
உண்மையான ‘ அன்பு ’
உயிர் உள்ளவரை துணைக்கு வரும் !


அறிமுக படுத்தினேன்
என் முதல் காதலியை ;
இவள் என் கல்லூரி சிநேகிதி என்று
வந்தது பிறகு ஞாபகம் ,
அன்று என் மனைவி அறிமுகபடுத்திய
அவள் சிநேகிதன் .


அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது
காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...


மலையை " பார்த்து "
மலைத்து விடாதே ,
மலை மீது ஏறினால்
அதுவும்
"கால் அடியில் ".


பசியோடு அன்னதான
போஸ்டரை ஓட்டினான்
தெருவோர சிறுவன் .


என்
அதிகாலை தூக்கத்தை
கெடுத்தவனை
கொன்று விட்டேன் .
கொசுவை கொன்ற
குழந்தையின் வாக்குமூலம்


திருமணம்
ஆகாமலே
விதவையானது
வெள்ளை ரோஜா


அவளை பார்க்கும்போது
சொல்ல நினைக்கிறேன் …
அவள் சிரிக்கும்போது
சொல்ல நினைக்கிறேன் …
அவள் என்னை முத்தம் இடும்போது
சொல்ல நினைக்கிறேன் …
ஆனால் சொல்ல
முடியவில்லை !!!
கடவுளே …
எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு …
அவளை “அம்மா ”
என்றழைக்க …


துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு ....


பகுமுறையில் புதிய வடிவம் !
பத்துவரிசையில் அவள்
போட்ட கலர் கோலம் !!

அதிகாலைப் ப்ரார்த்தனை !
அவள் போட்ட கோலங்கள்
அழியவே கூடாதென்று !!

உன்னால் இன்று நான்
நூலகத்தில் கோலப்புத்தகங்கள்
தேடுகின்றேன் !!


நினைத்ததெல்லாம் நடந்தபோது
நிஜமாய் வருந்தினேன் !
நல்லதை மட்டும் நினைக்கலானேன் !!

நிலவு வளர்ந்து
மறுபடியும் தேய்ந்து போனது !
இரு நிலவுகள் கூடாதென்று !!


இங்கே வெய்யிலும் மழையும்
சேர்ந்து அடிக்கிறது.
உண்மையைச் சொல் கண்ணே !
அங்கு நீ என்னை
செல்லமாய் கடிந்துகொண்டு,
உடனே சிரித்துவிட்டாய் தானே ??


இரு கண்களாய் பார்க்காமல்
ஒரு கண்ணாய்
இரு கால்களாய் நடக்காமல்
ஒரு காலாய்,
இரு மனதாய் இல்லாமல்
ஒரு மனதாய்
இடைவிடாமல் இறுதி வரையிலுமாய்
வாழ்வதுவே காதல் !!





தொலைவில் இருந்தாலும்
அருகில்,
தொலைந்து போனாலும்
நினைவில்,
தொல்லை தந்தாலும்
கண்களில்,
தொடர்ந்து வாழ்வதுவே
காதல் !!





காலங்கள் மாறினாலும்
நிலையாய்,
காதல் செய்யும் விதம் மாறினாலும்
உறுதியாய்,
காட்டில் உடல் எரியும்போதும்
நெருப்பாய்,
காலம் வணங்க வாழ்வதுவே
காதல் !!


கம்பன் ஏமாந்தார் !
கண்ணதாசன் கண்டுபிடித்தார் !
பாரதி புதுமை என்றார் !
வாலி கங்கை என்றார் !
வைரமுத்து அதிசயம் என்றார் !
பெண்களுக்கு பல அர்த்தங்கள் !
ஆண்கள் எல்லாரும் கம்பர்கள் !!!


உன் கண்கள் கருப்பு வெள்ளை !
என் கனவுகள் கலர்கலராய் !!
கண்ணே, உன்னால் தானே ?!


அடைமழை பெய்து ஓய்ந்தும்
நிற்காமல் சொட்டும் துளிகள்
ஓட்டை குடிசை வீடு !!




என் வீட்டுத் தகர ஜன்னல்
வெள்ளியாய் மின்னியது !
எதிர் வீட்டு ஜன்னலில் அவள் !!


நமது கண்ணோடு கண் நோக்கின்
நமக்கு வாய்ச் சொல் எதற்கு?
உன் பெற்றோரின் வசைச் சொல்லும் எதற்கு?

ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி

திரையரங்கின் வெளியே மழை
உள்ளே திரையிலும் ஒரே மழை
ஓடிக்கொண்டிருக்கிறது பழைய படம்

பேருந்து நிலையத்தில்
மறைந்தது மலர்த் தோட்டம்
--மகளிர் பேருந்து சென்றவுடன்

பெண்கள் முன்னால்
குனிந்த தலை நிமிர மாட்டான்
-- குட்டை பாவாடையில் பெண்கள்

வேலையில்லாமல்
உட்கார்ந்து சாப்பிட்டதில்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது-போலீஸாக

வெள்ளம்- தமிழ்நாட்டில் பெருமழை பெய்தால்
வெள்ளம்-கேரளாவில் சிறுமழை தூறினாலே


கண்ணாடி மனசு
குழந்தையின் உண்டியல் உடைவதற்கு முன் உடைந்து போனது....கண்ணாடி மனசு
குடும்பபாரம்
பளு தூக்கும் வீரனால்சுமக்கமுடியவில்லை.......குடும்பபாரம்
முதலிரவில்
பல இரவு விழித்திருந்தவன்உறங்கிவிட்டான்....முதலிரவில்
பாசமழை
கடும் கோடையிலும்அம்மா எப்படி பொழிகிறாள்....பாசமழை
காற்றாக மாறி..
காற்றாக மாறி என் சுவாசத்தில் கலந்தாய்
பின் கண்ணீராய் மாறி ஏன் என்னை பிரிந்தாய்..

மனதில் உள்ள சஞ்சலம்
உன்னை மறக்க தான் நினைக்கிறேன்
ஆனால் உன் நினைவால் ஏற்படும் மகிழ்ச்சியை ரசிக்கிறேன்...
இது என்ன சஞ்சலம்?

இது காதலா இல்லை....
வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது
உன் நினைவோ என் நெஞ்சை கொல்கிறது
எழுத்துக்கள் என்னை கை விட்டது
நான் நினைத்ததை நான் எவ்வாறு சொல்வது
இது காதலா? நான் காண்பது கனவா?
இல்லை. இது கானல்.
நான் இருப்பதோ நேர்காணலில்...

கவிதைகள்..கிறுக்கல்கள்..
கருத்துள்ள சிந்தனைகள் கிறுக்கல்கள் ஆகின்றன
கருதாமல் கிருக்குவதோ கவிதைகள் ஆகின்றன...


இலங்கையில் புதையல் ..
தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ...
காட்டுக்குள் கடுமையான போர் ...
பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை
அவைகள்தமிழ் பேசவில்லை ...


நேற்று
நீயும் நானுமாக
தீட்டிய ஓவியம்
இன்று
எங்கிருப்பது என்பது
தெரியாது தள்ளாட
நாமோ
தனித்தனியாக சித்திரம்
வரைந்து
சரித்திரம் படைக்கும்
ஆராய்ச்சியில்


அன்று நம் காதலுக்கு
3 வயது!
பரிசாய் எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!
உரையாடிய இதழ்கள் உறவாட ஆரம்பித்தன!
போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?
கடற்கரை
மணலில்என்
பாதச்சுவடுகளில்நீ கால் பதித்தபடி வந்தாய்.
இடையில் நீ நின்று விட
கால் வலிக்குதா' என்றேன்..
இல்லை இல்லை..
காதலிக்கிறேன் என்றாய்.
நினைவிருக்கிறதா ?
உனைப் பார்க்க
பேருந்து நிறுத்தத்தில் நான்!
ஐயோ..
தோழிகள் எல்லாம் இருக்காங்க..
பார்த்துடப் போறாங்க ...
போ போ என்றாய்' பதற்றத்துடன் !
நான்
செல்கையில்நீயும்
என் பின்னாலேயே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்...
நினைவிருக்கிறதா?


என் சவ ஊர்வலத்திற்கு
என்னவளும் வரக்கூடும்
வழியெங்கும் பூக்களை தூவிவிடுங்கள்
அவள் பாதம் நோகாமல் இருக்க.


இரும்பை ஈர்க்கும் காந்தத்தை போல்
என்னை உன்னிடம் ஈர்க்கிறாய்
என் அருகில் இருக்கும் நேரமெல்லம்
உன் அன்பை என் மீது பொழிகிறாய்
ஓரக்கண் பார்வையினால்
என் உயிரை தீண்டிச் செல்கிறாய்
ஞானக்கண் இருப்பது போல்
என் நினைவரிந்து நடக்கிறாய்
கண் தூங்கும் நேரத்தில்
கனவில் வந்து கொய்கிறாய்
உறங்காமல் நான் இருந்தால்
உன் உறக்கம் துறக்கிறாய்
என் கண்கள் கலங்கும் முன்
நீ கண்ணீர் சுறக்கிராய்
நான் விடுக்கும் புன்சிரிப்பில்
உன் உலகம் மறக்கிறாய்
நாள் தோறும் என் நினைவை
உன் நெஞ்சில் சுமக்கிறாய்
நான் செல்லும் பாதையினில்
என் கை கோர்த்து வருகிறாய்
என் உயிரோடு ஒன்றினைந்து உறவாடும் தேவதையே
என் செய்வேன் நான் உனக்கு
அதை கூறு நீ எனக்கு


என் குருதியின் நிறமும் சிவப்புதான் என்பதை
உன் தோட்டாவினால் தெரிந்து கொள்ள வெண்டுமா?
மண்ணில் மனிதனால் வரையபட்டிருக்கும் கோட்டை மாற்ற
மனித உயிர்தனை போக்க வேண்டுமா?
வெறும் வார்த்தையினால் தீர்க்ககூடிய பிரச்சனைக்கு
தீவிரவாதம் தான் தீர்வாகுமா?


ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும் நான் உன்னோடு
உன் மௌனத்தையும் நன்றறிந்து பேசவேண்டும் உன் கண்ணோடு
உன் சோகம் சுகம் தனை நீ பகிர வேண்டும் என்னோடு
சொல்லல் நீ வதைத்தால் நான் சென்று விடுவேன் மண்ணோடு...


உன்னை நினைத்து கவிதைகள் படித்தேன்
உன் ஆசைகள் அனைத்தயும் நிறைவெற்ற துடித்தேன்
உன் சிரிப்பை கான பல கதைகள் உரைத்தேன்
உனக்காக சில பாடல்கள் இசைத்தேன்


உன்னோடு பெச என் உறக்கம் துறந்தேன்
உன் முகம் கானும் சிறு நொடிகளை நேசித்தேன்
நீ நினைப்பதை கூட நிஜமாக்க முயற்ந்தேன்
உன்னை மகிழ்விக்கும் பொருட்டு என்னை நான் தொலைத்தேன்


உன் மனதை கட்டுபடுத்த முடியாத நீ
பிற மனிதரை கட்டுபடுத்த நினைப்பது
உன் தவரை சற்றும் உணராத நீ
பிறர் தவரை சுட்டி காட்டுவது
உன் கோவம் என்றும் குறைக்காத நீ
பிறர் மனம் கோனும் போல் உரைப்பது
உன் எண்ணம் தனை உயர்த்தாத நீ
பிறரை ஏளனம் செய்து சிரிப்பது


சிந்தனை செய் மானிடா.....
தாயின் கருனையினால் தரணியிலே பிறந்தோம்
குழந்தை பருவத்தில் தரயினிலே தவழ்ந்தோம்
பள்ளி பருவத்தில் புத்தகங்கள் சுமந்தோம்
இளமை பருவத்தில் காதலிலே விழுந்தோம்

பின்பு பணம், பொருள், புகழ் சேர்க்க அலைந்தோம்
நாம் பிறந்ததின் நோக்கதை மறந்தோம்
இந்த தேடலில் வாழ்க்கையை தொலத்தோம்
இறுதியில் வயது மூர்ந்து நோய் வாய்ப்பட்டு இறந்தோம்

பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல்
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இரு
இறந்த பின்பும் நம்மை சுமக்கும் இந்த பூமிக்கு
இருக்கும் பொழுது நாம் என்ன செய்தோம்?
சிந்தனை செய் மானிடா.....

கண்களே...பதில்சொல்
உன் வாயிலாக என்னுள் நுழைந்தாள்
பின்பு உனக்கும் தெரியாமல் என்னை துறந்தாள்
நீ சிந்தும் கண்ணீர் துளிகள் எதனால்?
அவள் பிரிவினாலா?
இல்லை குற்ற உணர்ச்சியினாலா?


தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள்!


நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று !

கண்டும்
கானாதவனைபோல் நான்!

காதலை
கையும் களவுமாய் பிடிக்க !


காதலுக்கு
கண்ணில்லை!
ஆம்..
இருந்திருந்தால்
உன்னை கண்டு
காதலித்திருக்கும்!


அவள் வீட்டு வாசலில்,
என்னை கோலமாக இடச்சொல்லுங்கள்!
என்மீது அவள் பார்வை தான் படவில்லை
பாதங்கலாவது பதியட்டும்...!


நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும் இரு கவிதைகள்
அதில் அன்பான காதலை நேசிப்போம்...
அழகான நட்பை சுவாசிப்போம் .


அன்பேகண்ணதாசன்
உன்னை கண்டதுண்டா?
இல்லை
என்று பொய் சொல்லி விடாதே?
உன்னை
காணமல் அவரால்
எப்படி
பெண்களின் எழிலோவித்தை இவ்வளவு எளிமையாக
எழுதமுடியும் ...


கோவிலில் அழகு சிலைகள்

அனைத்தும் அசையாதிருக்க!

ஒரு சிலை மட்டும் நகரக்கண்டேன்

“என்னவள்” கோவிலை சுற்றி வரும் பொழுது.


என்னை
தொலைத்துவிட்டேன் !
அது உன்னிடம் தான்
இருக்க வேண்டும்
கொஞ்சம் தேடி பார்த்து
சொல்லேன்!