twitter


ப்ரியமானவனே,
உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை
பிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று
என் கண்கள் எதோ ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கின்றன
காரணம் கேட்காதே,
எனக்கே தெரியவில்லை ஏன் என்று..
என்னை நினைத்து நானே பயம் கொள்கிறேன்
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன்
வாழ்க்கை என்றால்
இத்தனை விசித்திரமானதும், வேடிக்கையானதும்- என்று
உன்னோடு பழகிய பின்புதான் உணர்கிறேன்,
நண்பனாய் வருகிறாய் நீ,
தோள் சாய வேண்டும் என்கிறேன் நான்
எனை ஏன் இப்படி மாற்றிவிட்டாய்?
நான் செய்த தவறுதான் என்ன?
உன்னை நேசித்தது ஏன் தவறா?
உன்னை நெருங்கி வந்தது என் தவறா?
கள்வனே, உன்னை நான் பிரியவில்லை,
ஆனால் விலகிச்செல்கிறேன்
உன்னை காயபடுத்தவில்லை,
ஆனால் காலங்களை கடக்க வழி தேடுகிறேன்.
கேள்விகள் கேட்காதே. காரணம்,,
இப்போது நானே ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறேன்
கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தால்
தோழனாக வந்து தலை கோதுகிறாய்
மறுபக்கம் ?????? வந்து மார்போடு அணைக்கிறாய்,
தவிக்கிறேன் நான்,
உணர்விற்கும், உறவுக்கும் மத்தியில் நின்று
மறுபடியும் சொல்கிறேன் உன்னை மறக்கவில்லை நான்
உன்னோடு பேசிப்பழகிய நாட்கள் இன்றும்
என்னுள் நீங்கா நினைவுகளாக!
நகர்ந்த்துக்கொண்டுதான் இருக்கின்றன!
இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும்!!!


கணினியின்
கண்டுபிடிப்புக்கு பின்
உலகமே என் விரல் நுனியில் என
மார் தட்டுகிறாயே !
ஒரு நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை என்பதை உணர்வது எப்போது ?


கவலையையும் சோம்பலையும்
கழற்றி எறிந்துவிட்டு
உற்சாகத்தை
உடுத்திக்கொள் !
உன் பலகீனங்களை
உழைப்பெனும்
பலம் கொண்டு
பலகீனப்படுத்து!!
நீயே சரணாகதி என்று
எப்போதும் வெற்றி
உன் காலடியில் தவம் கிடக்கும் !!!


சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

நன்றி - கல்குதிரை


கொஞ்சம் பொறு என
ரோஜாவை எடுத்து நீட்ட ;
உன்னை விட அழகாய்
வெட்கத்தில்
சிவக்க தெரியவில்லை
ரோஜாவிற்கு !!!


அரச மரத்தை சுற்றாமல் …
பத்து மதம் சுமக்காமல் …
பிரசவ வலியை அனுபவிக்காமல் …
பிள்ளை வரம் பெற்றது
குப்பை தொட்டி !


இந்த உலகம் என்னைபோல
உண்மையான காதலர்களை
காணும் வரை
என் கல்லறை என்றும்
ஒரு உலக அதிசயமே !!!


நான் நேசிக்கும்
அவள் முகத்தை
ஓவியமாக தீட்டி வைத்தேன் !
அதில் இருக்கும்
கண்களாவது
என்னை பார்க்கட்டும்
என்று !!!


எதிர் வீடு ஜன்னலை
பார்த்தேன் நிறைய சட்டைகள் ..!
என் சட்டையை பார்த்தேன்
நிறைய ஜன்னல்கள் ..!


நீ பார்க்க வேண்டும் என்பதற்காக தான் …
உயிரை பணயம் வைக்கிறேன் …
நீ வரும் பேருந்தில் படியில்
நின்று பயணம் செய்கிறேன்
இல்லை இல்லை
பயமறியாது ‘ காதல் ’செய்கிறேன்!!!
(நன்றி - ஜார்ஜ் )


நீ சிரித்து விட்டுப்போன பின்பு தான்

எனக்கு நான் யார் என்பதே தெரிகிறது ….

உன்னால் பைத்தியம் ஆனவன் நானா ?

இல்லை உனக்காக பைத்தியம் ஆனவன் நானா ?


எப்படியும்
என் காதல்
உனக்கு புரிய போவதில்லை ….
நானும் உன்னை மறப்பதாக இல்லை …
ஆனாலும் ஏன் என்னை
நீ உறங்க விடுவதில்லை …
பகலில் உன்னை பின் தொடர்வதால …..


உன்னை
படைத்தவனுக்கும்
கூட புரியாது !
உன் பார்வையின் அர்த்தம்
உன் விழியை பார்த்த
எனக்கும் புரியவில்லை!
அனால்
என்னமோ செய்கிறது
என்னை !


என்னவள்

ஒரு - கவிதை எழுதினால்

கிழே கையெழுத்திட்டால்

குழம்பினேன்

எது கவிதை என்று ...!


அவள்
என்னை கடந்து செல்லும்
போதெல்லாம்
என் இதயத்தை கூட
நிறுத்தி வைக்கிறேன்!
அவள் கால் கொலுசின்
ஓசையை ரசிப்பதற்கு !


எப்பொழுதெல்லாம்
உள்ளம் வலிக்குமோ
அப்பொழுதெல்லாம்
உன் தாயிடம் பேசிப்பார்
அவள் அன்பு
உன் மனதை வருடும் !


உன் முகத்தை
பார்க்காமல் செல்கிறேன் !
உன்னை பிடிக்காமல் இல்லை
நீ என்னை பார்க்காமல் செல்வதை
பார்க்க முடியாமல் ...!


பிணம் போகும் பாதையில்
மலர் தூவும் மனிதர்கள்
இரு மனம் போகும்
பாதையில் மலர் தூவ
மறுப்பதேன் !






அன்பே..
உன் காதோர முடியை
என் சுண்டு விரலால் ஒதுக்கிவிட்டு
உன் காதில் என் காதலை
நான் சொல்ல அந்நேரம்....
உன் உதட்டோரம்
நீ தவழவிடும் புன்னகையை ரசிப்பதற்காகவே
ஆயிரம் முறைகூட சொல்லலாமடி
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று !!!!!
(நன்றி - மணிகண்டன் )


எனக்கு வரதட்சணை என்று

எதுவும் வேண்டாம்...!

ஆனால் தயவுசெய்து

நீ உடை மாற்றும்போது மறந்தும் கூட

உன் தோழிகளை பக்கத்தில் வைத்துகொள்ளதே...

பிறகு கண்பட்டு

உன் "அழகு சீர்வரிசைகளில்" ஒன்று குறைந்தாலும்

நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்...!!


நீந்தும் கண்ணே !

நான் உன் காதலன்.

சிவந்த இதழே !

நான் உன் காதலன்.

சிரிக்கும் முத்தே !

நான் உன் காதலன்.

பௌர்ணமி முகமே !

நான் உன் காதலன்.

பாதம் பார்க்கும் நாணமே !

நான் உன் காதலன்.

பொய்க்கும் கோபமே !

நான் உன் காதலன்.

மலரா மொட்டே !

நான் உன் காதலன்.

மென்கொடி இடையே !

நான் உன் காதலன்.

பருவப் பெண்ணே !

நான் உன் காதலன்.

மறவாய் ! நான் உன் காதலன்.

பெண்ணே ! நான் உன் காதலன்.


அணில் கடித்த பழம்...
அது மிக இனிப்பாக இருக்குமாம்..!!
அழகி!
நீ கடித்த பழத்தை
அணிலே...
கெஞ்சி கேட்டு கொண்டு நிற்கும்...!??


"பிரிய சில்மிசக்காரா"
என் கைப்பையில் இருக்கும்
"அழகு' சாதன பொருட்களை பார்த்து..,
நீ சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது
"இத்தனை நாள் இதை போட்டுத்தான்
உன் கொள்ளை அழகுகளை மறைத்து கொண்டு இருந்தாயா..?
ம்ம்ம்...
உன் வாசமிகு வியர்வையை விடவா
இந்த "உடல்வாசனை பூச்சு"
என்னை மயக்கிவிட போகிறது? என்று..!


வானவில்லையும் திரும்பி பார்க்க வைக்கும்
வர்ணகலவையே!
நீ கோபமாய் பார்த்தால்...
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்..
சுந்தரி உனக்கும்..
அதிக வித்தியாசமில்லை !!!
நீ பிரியமாய் கொடுக்க ஆரம்பித்தால்...
கர்ணனுக்கும்!
காதலி உனக்கும்!
அதிக வித்தியாசமில்லை !!!


முகவரி இல்லாத பயணம் ,

நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க ' மாட்டேன் .

வலியே தெரியாத காயம் ,

நான் வலியால் துடித்தாலும் மருந்திட ' மாட்டேன் .

வடிவம் இல்லாத உருவம் ,

நான் மறைந்தாலும் உன்னை மறக்க ' மாட்டேன் .

உறவு தெரியாத உணர்வு

நான் மூச்சு விட்டாலும் உன் சுவாசம் விட ' மாட்டேன் .

நான் தடுமாறினாலும் உன்னை தவறவிட மாட்டேன் .

என் அருமை காதலியே !


அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே ,

இன்று அவள் கைவிட்ட பிறகு - உன் ,

கையை தாங்கி பிடித்தது நானேதான் .

இப்படிக்கு சிகரெட்...




நான் உன்னிடம்
கொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம்
தெரிந்து விட்டது
உன்னை தவிர !!!


அவள் என்னை
பிரிந்து விட்டால்
என்பது எனக்கு தெரியும்
பவம் என் இதயத்துக்கு தெரியாது
அது அவளுக்காக இன்னும்
துடித்து கொண்டு இருக்கிறது !!!