twitter


பெண்களின் காதல் படித்தவனையும் பரதேசி ஆக்கும்.
பெண்களின் பார்வை அறிஞனுக்கும் அல்வா கொடுக்கும் .
பெண்களின் அழகைப் பார்த்து மயங்கினால்
அதில் ஆப்பு இருப்பதை மறந்துவிடுவாய்.
பெண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.
அறிவை நீ நம்பு உன்னை காப்பாற்றும்.
பெண்ணைக் காதலித்து காலத்தை வீணாக்குவதைப்பார்க்கிலும்
தாய்மண்ணைக் காதலித்து சரித்திரம் படைத்திடில் தமிழா...
நாளைய வரலாறு உன்னை வணங்கிடும்
நாளைய சந்ததி உன்னை போற்றிடும்.


நித்தம் ஒரு முத்தம் என
அத்தை மகள் கன்னத்தில்
மொத்தம் நான் சேர்த்து வைத்த
முத்தங்களை ,
வட்டி எட்டு வாங்கிடலாம் என்றிருந்தேன்
வங்கியே கொள்ளை போய்விட்டதம்மா !!


தினப்பத்திரிக்கை எடுக்கவரும்போதெல்லாம்
நீ பார்ப்பது எதுக்கு ஓசியில் பேப்பர்,
என்பதுபோல இருக்கும்,
தினம் தினமுன்னைப்பார்ப்பதுக்காகவே தினப்பத்திரிக்கை எடுக்கிறேன் என்பது உனக்கு தெரியுமா?

சின்னச்சிரிப்பாவது சிரிக்கமாட்டாயா நீ என
எத்தனை முறை ஏங்கினேன் தெரியுமா?
உன்பார்வையின் அர்த்தம் தெரியாமல் எனக்குள் கனன்று போனேன்.
உன் பார்வை என் கண்களில் தெரியும் காதலை அங்கீகரிக்குமா?
கேட்கத்தெரியவில்லை எனக்கு நீ என்னைக்காதலிக்கிறாயா என்று
உன் பதில்களுக்காக என் மொளனத்தை சேமிக்கிறேன்.

ஒருவேளை நீயும் மொளனம் காக்கிறாயோ ?
இருவரும் மொளனமாயிருந்தால் ஏதுவழி? ஒருமுறையாவது கண்களால் சிரித்துவிடு
தைரியம் வந்துவிடும் எனக்கு என் காதலைச்சொல்ல உன்னிடம்...


மறுபடியும் பிறக்க விரும்பவில்லை,

இந்த பிறவியே போதும்

திரும்பவும் பிறக்க ஆசை,

நீ மறுபடியும் பிறப்பாயா?

ஏனெனில் தேவதைகளுக்கெல்லாம் பிறப்பில்லையாமே?


உனது தந்தையின் இறப்பு செய்தி
ஈ-மெயிலில் வருகிறது
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளை தேடி எடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்
உயிரே மீட்க உதவாத உன் டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரித்த சாம்பல் கூட எஞ்சி இருக்காது
அதனாலென்ன நண்பனே ...
இறந்துபோனவர்களுடன் தொடபுகொள்ள
ஒரு வெப்சைட் வராமலா போய்விடும் !


நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்
தோழி...!
(நன்றி-சதீஷ் )


நீ சுகமாய்
உன் திருமண பத்திரிக்கை கொடுத்து போய் விட்டாய்...!
என் ஆத்ம நண்பர்களே...
என்னை பார்க்க இனி நீங்கள் வருவதாய் இருந்தால்.......

அவள் என் கடிதத்தை கிழித்த
அந்த ரயில் பாலத்தின் அருகேயோ..?

தினமும் அவள் வரும் அந்த பேருந்திலோ..?

பூக்கார அக்காவிடம்...
என் துக்கத்தை சொல்லிகொண்டோ..?
தாழிடப்பட்ட என் இருண்ட அறையிலோ..?

முத்தமிட்ட கோவிலின் பின் புறமோ..?

எங்காவது இருப்பேன்..!!!!

இல்லையென்றால் இறந்து போய் இருப்பேன்...
இறந்த சுவடுகூட இல்லாமல்..!


தூக்கம் என் கண்களை தழுவுகிறது , ஆனால்
தூங்கினால் நீ என் கனவில் வருவாயே !
உன்னை கனவில் கூட காணவேண்டாம் என்றுதான் ,
கண்களை மூடாமலே கழிகிறது என் இரவு !
ஆனால் இருளில் கூட என் முன் தோன்றி ,
அழவைக்கிறது உன் கண்களும் அதில் தெரியும் துரோகமும்


இளைஞனே...
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது !
பார்வையிருந்தும்
பாதையை தேடாமல் நீ !
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம் !!