twitter


புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!


காதல் வெறும் கற்பூரம்
எரிய எரிய மணம்வீசும்
காணாமல் போகும் காற்றோடு

காதல் வெறும் குட்டை
மழை வந்தால் நிறையும்
கோடை வந்தால் மைதானம்

காதல் வெறும் கவிதை
படிக்கப் படிக்க சுகம் கூசும்
கிழித்துப் போட்டால் வார்த்தை

காதல் வெறும் வானம்
அளக்க அளக்க முடியாது
கண்ணை மூடு தெரியாது

காதல் வெறும் நிலவு
பார்க்கப் பார்க்க ஜொலிக்கும்
உள்ளுக்குள்ளே இருட்டிக் கிடக்கும்

காதல் வெறும் மயக்கம்
முழ்க முழ்க இனிக்கும்
முழித்துப் பார்த்தால் புளிக்கும்

காதல் வெறும் காமம்
தொடங்கும் பொது ருசிக்கும்
முடிந்த பின் பசிக்கும்

காதல் வெறும் உணர்வு
வாழ்ந்து பார்த்தால் புரியும்
புரிந்த பின் மனம் தெளியும்

காதல் வெறும் பாட்டு
முதலாம் சுற்றில் களிக்கும்
போகப் போக சலிக்கும்

காதல் வெறும் காதல்
யாருக்கு யார் மேல் வரும்
எப்படியோ முற்று பெறும்

(நன்றி - )


குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுவன்!!!



அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.