twitter


ஏ நிலவே....!!!!!!!

நீ ஆயிரம் முறை
பிறந்து வந்தாலும்
தோற்றுத்தான் போவாய்
எனை தீண்டும் என் அவளின்
பார்வை பிரகாசத்துடன்
ஒப்பிடும் போது.......

ஏ மலரே....!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
விரலின் மென்மைக்கு
ஈடாகுமா உன் மென்மை....

ஏ தென்றலே...!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
மூச்சுக்காற்றின் குளுமைக்கு
ஈடாகுமா உன் குளிர்ச்சி....

ஏ அலைகடலே...!!!!!!

என் அவள் காட்டும் அன்பின்
ஆழத்தின் முன் நீ
மிக சாதாரணம் தான் எனக்கு...

0 comments:

Post a Comment