தினப்பத்திரிக்கை எடுக்கவரும்போதெல்லாம்
நீ பார்ப்பது எதுக்கு ஓசியில் பேப்பர்,
என்பதுபோல இருக்கும்,
தினம் தினமுன்னைப்பார்ப்பதுக்காகவே தினப்பத்திரிக்கை எடுக்கிறேன் என்பது உனக்கு தெரியுமா?
சின்னச்சிரிப்பாவது சிரிக்கமாட்டாயா நீ என
எத்தனை முறை ஏங்கினேன் தெரியுமா?
உன்பார்வையின் அர்த்தம் தெரியாமல் எனக்குள் கனன்று போனேன்.
உன் பார்வை என் கண்களில் தெரியும் காதலை அங்கீகரிக்குமா?
கேட்கத்தெரியவில்லை எனக்கு நீ என்னைக்காதலிக்கிறாயா என்று
உன் பதில்களுக்காக என் மொளனத்தை சேமிக்கிறேன்.
ஒருவேளை நீயும் மொளனம் காக்கிறாயோ ?
இருவரும் மொளனமாயிருந்தால் ஏதுவழி? ஒருமுறையாவது கண்களால் சிரித்துவிடு
தைரியம் வந்துவிடும் எனக்கு என் காதலைச்சொல்ல உன்னிடம்...