undefined
undefined
undefined
உனது தந்தையின் இறப்பு செய்தி
ஈ-மெயிலில் வருகிறது
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளை தேடி எடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்
உயிரே மீட்க உதவாத உன் டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரித்த சாம்பல் கூட எஞ்சி இருக்காது
அதனாலென்ன நண்பனே ...
இறந்துபோனவர்களுடன் தொடபுகொள்ள
ஒரு வெப்சைட் வராமலா போய்விடும் !