நமது கண்ணோடு கண் நோக்கின்
நமக்கு வாய்ச் சொல் எதற்கு?
உன் பெற்றோரின் வசைச் சொல்லும் எதற்கு?
ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி
திரையரங்கின் வெளியே மழை
உள்ளே திரையிலும் ஒரே மழை
ஓடிக்கொண்டிருக்கிறது பழைய படம்
பேருந்து நிலையத்தில்
மறைந்தது மலர்த் தோட்டம்
--மகளிர் பேருந்து சென்றவுடன்
பெண்கள் முன்னால்
குனிந்த தலை நிமிர மாட்டான்
-- குட்டை பாவாடையில் பெண்கள்
வேலையில்லாமல்
உட்கார்ந்து சாப்பிட்டதில்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது-போலீஸாக
வெள்ளம்- தமிழ்நாட்டில் பெருமழை பெய்தால்
வெள்ளம்-கேரளாவில் சிறுமழை தூறினாலே