twitter


சிந்தனை செய் மானிடா.....
தாயின் கருனையினால் தரணியிலே பிறந்தோம்
குழந்தை பருவத்தில் தரயினிலே தவழ்ந்தோம்
பள்ளி பருவத்தில் புத்தகங்கள் சுமந்தோம்
இளமை பருவத்தில் காதலிலே விழுந்தோம்

பின்பு பணம், பொருள், புகழ் சேர்க்க அலைந்தோம்
நாம் பிறந்ததின் நோக்கதை மறந்தோம்
இந்த தேடலில் வாழ்க்கையை தொலத்தோம்
இறுதியில் வயது மூர்ந்து நோய் வாய்ப்பட்டு இறந்தோம்

பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல்
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இரு
இறந்த பின்பும் நம்மை சுமக்கும் இந்த பூமிக்கு
இருக்கும் பொழுது நாம் என்ன செய்தோம்?
சிந்தனை செய் மானிடா.....

கண்களே...பதில்சொல்
உன் வாயிலாக என்னுள் நுழைந்தாள்
பின்பு உனக்கும் தெரியாமல் என்னை துறந்தாள்
நீ சிந்தும் கண்ணீர் துளிகள் எதனால்?
அவள் பிரிவினாலா?
இல்லை குற்ற உணர்ச்சியினாலா?

0 comments:

Post a Comment