twitter


உன் தேர்வு முடியும் வரை

நோ சாட் நோ நெட்

என சட்டம் இயற்றினாய்

உன் முன்னோர்கள்

வெள்ளையர்களுடன் வேலைப்பார்த்தவர்களோ

உன் அடக்குமுறைச் சட்டங்கள்

ரவுலட் சட்டத்தைவிட

மிகக் கொடியவை

***************************************************

யார் யாரிடமோ

நம்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்

நீயும் நானும் பேசிக் கொள்வோமே

இவர்களின் நலன் கருதி..

****************************************************

உன்னை வந்து கேட்க ஆசை

உனக்காக காத்திருக்கும் நேரங்களில்

நீ வர தாமதமாகும் காரணங்களை

நீ தாமதமாக வரும் முன்பே

*****************************************************

படவா.. புரிஞ்சிக்கோடா...

என் தங்கம்..

இந்த வார்த்தைகள் மட்டும்

தமிழில் இல்லையென்றால்

உன்னிடம் என் ஸ்டிரைக்'கை

வாபஸ் வாங்கமாட்டேன்...

*****************************************************

0 comments:

Post a Comment