மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய் நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்
கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா
நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன்
என் நண்பனே கரைகிறேன்
உன் நினைவிலே உன்னை இழக்கிறேன் என் நண்பனே!!!
(நன்றி - ஜீவிதா )