twitter


அன்று நம் காதலுக்கு
3 வயது!
பரிசாய் எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!
உரையாடிய இதழ்கள் உறவாட ஆரம்பித்தன!
போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?
கடற்கரை
மணலில்என்
பாதச்சுவடுகளில்நீ கால் பதித்தபடி வந்தாய்.
இடையில் நீ நின்று விட
கால் வலிக்குதா' என்றேன்..
இல்லை இல்லை..
காதலிக்கிறேன் என்றாய்.
நினைவிருக்கிறதா ?
உனைப் பார்க்க
பேருந்து நிறுத்தத்தில் நான்!
ஐயோ..
தோழிகள் எல்லாம் இருக்காங்க..
பார்த்துடப் போறாங்க ...
போ போ என்றாய்' பதற்றத்துடன் !
நான்
செல்கையில்நீயும்
என் பின்னாலேயே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்...
நினைவிருக்கிறதா?

0 comments:

Post a Comment