twitter


இரும்பை ஈர்க்கும் காந்தத்தை போல்
என்னை உன்னிடம் ஈர்க்கிறாய்
என் அருகில் இருக்கும் நேரமெல்லம்
உன் அன்பை என் மீது பொழிகிறாய்
ஓரக்கண் பார்வையினால்
என் உயிரை தீண்டிச் செல்கிறாய்
ஞானக்கண் இருப்பது போல்
என் நினைவரிந்து நடக்கிறாய்
கண் தூங்கும் நேரத்தில்
கனவில் வந்து கொய்கிறாய்
உறங்காமல் நான் இருந்தால்
உன் உறக்கம் துறக்கிறாய்
என் கண்கள் கலங்கும் முன்
நீ கண்ணீர் சுறக்கிராய்
நான் விடுக்கும் புன்சிரிப்பில்
உன் உலகம் மறக்கிறாய்
நாள் தோறும் என் நினைவை
உன் நெஞ்சில் சுமக்கிறாய்
நான் செல்லும் பாதையினில்
என் கை கோர்த்து வருகிறாய்
என் உயிரோடு ஒன்றினைந்து உறவாடும் தேவதையே
என் செய்வேன் நான் உனக்கு
அதை கூறு நீ எனக்கு

0 comments:

Post a Comment