twitter


அவர்கள்
வெளியேறுவதற்காக வந்தவர்கள்
உள்ளே வந்து உங்களை வெளியேற்றியவர்கள்
அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்
அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய்
உங்களை
மொய்க்க வைப்பவர்கள்
அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும் போது தூக்கத்தைத் திருடுபவர்கள் தூங்கும் போது
கனவுகளைக் களவாடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பயண திசைகளைமாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால் ஓடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பசியை உண்பவர்கள்
அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள் விளையாடிவிட்டு
பின் உடைத்துப் போடுபவர்கள்
அவர்கள் உங்கள் ஏமாற்றத்தின் விந்தில் உற்பத்தியாகிறவர்கள்
அவர்கள் உங்களில் இருப்பவர்கள்
ஆனால்
நீங்கள் அவர்களில் இருப்பதில்லை
(நன்றி - ராஜா சந்திரசேகர் )

0 comments:

Post a Comment