இரு கண்களாய் பார்க்காமல்
ஒரு கண்ணாய்
இரு கால்களாய் நடக்காமல்
ஒரு காலாய்,
இரு மனதாய் இல்லாமல்
ஒரு மனதாய்
இடைவிடாமல் இறுதி வரையிலுமாய்
வாழ்வதுவே காதல் !!
தொலைவில் இருந்தாலும்
அருகில்,
தொலைந்து போனாலும்
நினைவில்,
தொல்லை தந்தாலும்
கண்களில்,
தொடர்ந்து வாழ்வதுவே
காதல் !!
காலங்கள் மாறினாலும்
நிலையாய்,
காதல் செய்யும் விதம் மாறினாலும்
உறுதியாய்,
காட்டில் உடல் எரியும்போதும்
நெருப்பாய்,
காலம் வணங்க வாழ்வதுவே
காதல் !!