கண்ணாடி மனசு
குழந்தையின் உண்டியல் உடைவதற்கு முன் உடைந்து போனது....கண்ணாடி மனசு
குடும்பபாரம்
பளு தூக்கும் வீரனால்சுமக்கமுடியவில்லை.......குடும்பபாரம்
முதலிரவில்
பல இரவு விழித்திருந்தவன்உறங்கிவிட்டான்....முதலிரவில்
பாசமழை
கடும் கோடையிலும்அம்மா எப்படி பொழிகிறாள்....பாசமழை
காற்றாக மாறி..
காற்றாக மாறி என் சுவாசத்தில் கலந்தாய்
பின் கண்ணீராய் மாறி ஏன் என்னை பிரிந்தாய்..
மனதில் உள்ள சஞ்சலம்
உன்னை மறக்க தான் நினைக்கிறேன்
ஆனால் உன் நினைவால் ஏற்படும் மகிழ்ச்சியை ரசிக்கிறேன்...
இது என்ன சஞ்சலம்?
இது காதலா இல்லை....
வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது
உன் நினைவோ என் நெஞ்சை கொல்கிறது
எழுத்துக்கள் என்னை கை விட்டது
நான் நினைத்ததை நான் எவ்வாறு சொல்வது
இது காதலா? நான் காண்பது கனவா?
இல்லை. இது கானல்.
நான் இருப்பதோ நேர்காணலில்...
கவிதைகள்..கிறுக்கல்கள்..
கருத்துள்ள சிந்தனைகள் கிறுக்கல்கள் ஆகின்றன
கருதாமல் கிருக்குவதோ கவிதைகள் ஆகின்றன...