ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்
ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்
ஆண் தன் தோரணை கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்
ஆண் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்
உன்னுடனான காமம் சலித்துவிட்டது என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது என்றாள் பெண்
மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்
பாழடையத்துவங்கிய
வீட்டின்அலமாரியில் இருக்கின்றன
ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணின் பொம்மையும்
முத்தமிட்டபடி.( இந்த கவிதை இதழ்கள் வலைபக்கதிலிருந்து எடுக்கப்பட்டது )