குடல் பசியை போக்கிட
உடல் விலை போகிறது
விபச்சாரம்
மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரன் ...
சுவரில் எழுதாதே !
சுவர் முழுவதும்
எழுதிருந்தது ...
அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
(நன்றி இரா ரவி )
June 1, 2018 at 8:52 AM
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வடிப்பார் கண்ணீர்
காந்தியடிகள் இருந்தால்
மதுக்கடைகள் !
மதுக்கோப்பை மோதல்
உணர்த்தியது
பின்னால் வரும் மோதலை !
மதுக்கோப்பை மோதி
சரிபார்த்தனர்
அளவை !
நட்டநடுநிசியில் அல்ல
பட்டப்பகலில் நடக்க முடியவில்லை
பெண்கள் !
உண்டு ஏட்டில் எழுத்தில்
இல்லை நடைமுறையில்
பெண் விடுதலை !
போகப்பொருள் அல்ல
உயிரும் உணர்வும் உள்ளவள்
பெண் !
எண்ணி விடலாம்
விரல் விட்டு
புதுமைப்பெண்கள் !
அகிலம்முழுவதும்
ஆணாதிக்கத்தால்
அடிமைப்பெண்கள் !
பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
சமையல் அறையை !
கோடை மழை
குதூகலத்தில்
உழவன் !
ஒன்றுபட்டால்
உறுதியாகும் வெற்றி
உணர்த்தியது சல்லிக்கட்டு !
முடியவில்லை முத்தெடுக்க
முழுநேர அரசியல்வாதிகளால்
பகுதிநேர அரசியல் ?
ஆசையால் அழிந்தும்
வரவில்லை அறிவு
அரசியல்வாதிகளுக்கு !
உடன் பிறந்த நோயானது
ஊழல்
அரசியல்வாதிகளுக்கு !
சடங்குகளில்
ஒன்றானது
நிதிநிலை அறிக்கை !
ஏற்றமின்றி
ஏமாற்றத்தில்
ஏழை மக்கள் !
உயிருக்கு உலை
வாகனம் ஓட்டுகையில்
அலைபேசியில் பேசுதல் !
பிறக்கையில் இருந்தளவே
இறுதியிலும் இருந்ததா ?
கர்ணனின் கவசம் !
பெட்ரோல் விலை ஏற ஏற
இறங்குகிறது
ஆள்வோரின் மதிப்பு !